Tuesday, May 01, 2007

நூலகம் ஓர் பார்வை

ஆயிரம் நண்பர்களை விட ஒரு நல்ல புத்தகம் மேலானது என்று பழமொழி உண்டு. அதை நூற்றுக்கு நூறு ஆமோதிக்கலாம். என்னுடய புத்தகம் வாசிக்கும் பழககத்திற்கு அம்மாவும் வீட்டுக்கு அருகில் அமைந்த இந்த நூலகமும் முதல் காரணமாகும். இங்கு தான் எனக்கு ஆனந்த விகடணும், கல்கியும், தமிழ்வான்ணனும் அறிமுகம் ஆனார்கள் .

25 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டை தவிர பொழுது போகாம இருந்த எங்கள் வன்னிய தேனாம்பேட்டை மக்களுக்கு இந்த நூலக திறப்பு விழா கொண்டாட்டமாக இருந்தது நம்முடைய படிக்கும் பழக்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி கொண்டு வருவதை இப்பொழுது உணர்கிறேன். சிறு வயதில் பீர்பால், பஞ்சதந்திரம், வேதாளம் கதைகளில் இருந்து தமிழ்வான்னானின் "சங்கர் லால்" வரை மூச்சு விடாமல் படித்தது இன்று பசுமையாய் நினைவில் நிற்கின்றது பின்னர் பள்ளி இறுதியாண்டு காலத்தில் வரலாற்று புதினங்களிலும்
பயண அனுபவங்களிலும் தேடி பிடித்து படித்து இருக்கின்றேன். பிடித்த புத்தகத்தை பாதி படித்து விட்டு யாரும் தொடாத பகுதியான ஆன்மீகம், மொழிபெயர்ப்பியல் போன்ற இடங்களில் ஒளித்து விட்டு விட்டு மறுநாள் தொடர்ந்து படிக்கும் சுயநல்ல புத்தியை இன்று நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது




வேலைக்கு சேர்ந்த பின் இங்கு வருவது குறைந்து போனது. கடந்த வாரம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் இந்த நூலகத்தில் நுழைந்தேன். படிப்பதற்காக போடப்பட்ட இருக்கைகள் குறைந்து காணப்பட்டன அதிசயமாக ஒரு சிறுவர்களையும் அங்கு காண முடியவில்லை . தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பாதிப்பு நன்றாகவே தெரிந்தது . மனம் கணக்க ஒரு ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பை வீட்டிற்கு வாங்கி வந்தேன்.....

No comments: